வவுனியா 211 ஆம் படைத்தளத்தில் கைக்குண்டு வெடிப்பு 3 படையினர் காயம்

வவுனியாவில் உள்ள 211 ஆம் படைத்தளத்தில் இன்று காலை இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் 3 இராணுவத்தினர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படைத்தளத்தின் ஆயுதக் கிடங்கினை சுத்தம் செய்தபோது தவறுதலாக கீழே விழுந்த கைக்குண்டு ஒன்று வெடித்ததையடுத்தே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரது நிலை மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசாரும் இராணுவத்தினரும் வேறு வேறாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.