தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் ‐ பீ.பியசேன

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியை இலங்கையில் தடை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன அறிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன நேற்றைய தினம் நடைபெற்ற 18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் நடவடிக்கைகளினால் தமிழ் மக்கள் அதிகம் இன்னல்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுடன் தமக்கு உடன்பாடு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பீ.பியசேன, அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.