வித்தியாதரன் பயங்கரவாதி; அவரை காக்க முயல்வோர் கையும் இரத்தக்கறை படிந்தது: அவுஸ்திரேலிய நிருபரிடம் சீறி வெடித்த கோத்தபாய

e0ae95e0af8be0aea4e0af8de0aea4e0aeaae0aebee0aeaf-e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0ae9aசிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்ட ‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ பத்திரிகைகளின் ஆசிரியர் ந.வித்தியாதரன் பயங்கரவாதி; அவரை காக்க முயல்வோர் கையும் இரத்தக்கறை படிந்தது என்று அவுஸ்திரேலிய நிருபரிடம் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்துள்ளார்.

கொழும்பில் கடந்த மாதம் 20 ஆம் நாள்  தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய வான் கரும்புலித் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டி கொழும்பில் கடந்த மாதம் 26 ஆம் நாள் ந.வித்தியாதரன் கடத்தப்பட்ட பின்னர் கைது என சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 

அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். தொலைக்காட்சியின் ‘டேட் லைன்’ என்ற பெட்டக நிகழ்ச்சியின் நிருபர், ந.வித்தியாதரன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோது கோத்தபாய ராஜபக்ச சீறி வெடித்தவாறு பதில்களை வழங்கினார்.

Part 1

Part 2

Part 3

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.