அகதிகள் விடயம் குறித்து ஆராய கனேடிய அதிகாரி சிறிலங்கா விஜயம்

இலங்கையிலிருந்து அகதிகள் பெருமளவு கனடா நோக்கி வருவதைத் தொடர்ந்து இது குறித்து ஆராய ஆசிய பிராந்தியத்திற்கான கனடாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் வார்ட் எலொக் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் அகதிகளின் வெளியேற்றம் குறித்து இவர் ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் அவரது விஜயம் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

அண்மைக்காலமாக கனேடிய கடற் பரப்பிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கனேடிய உள்துறை திணைக்களம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் தாய்லாந்திற்கும் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.