லக்ஸர் ஈ தய்பா அமைப்பு இலங்கையில் பயிற்சி பெறவில்லை – கோதபாய

கடும் போக்குடைய இஸ்லாமிய அமைப்பான லக்ஸர் ஈ தய்பா அமைப்பு இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொள்ளவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் எந்தவொரு கடும்போக்குடைய அமைப்பும் இயங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

லக்ஸர் ஈ தய்பா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கொழும்பில் பயிற்சிப் பெற்றுக் கொண்டதாக இந்தியா வெளியிட்டுள்ள தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் தாக்குதல் மேற்கொண்ட குறித்த தீவிரவாதி கொழும்பில் பயிற்சி பெற்றுக் கொண்டதாக வெளியான செய்திகள் குறித்து கண்காணிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
 
இந்தத் தகவல்கள் தொடர்பில் புதுடெல்லிக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.