தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் இலங்கையர்களுக்கு வழங்கப்படவிருந்த பயிற்சிகளை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது

தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் இலங்கையர்களுக்கு வழங்கப்படவிருந்த பயிற்சி நெறிகளை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
 
இலங்கையர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளின் மூலம் அமெரிக்க தொழிற்சந்தையில் பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இலங்கையர்களுக்கு பயிற்சி வழங்குவதனை எதிர்த்துள்ளார்.
 
மூவாயிரம் இலங்கையர்களுக்கு தொழில் பயிற்களை வழங்குவதற்கு யூ.எஸ்.எயிட் நிறுவனம் இணக்கம் தெரிவித்திருந்தது.
 
பீ.பீ.ஓ எனப்படும் பிசினஸ் புரோசெசிங் அவுட் சோசிங் மற்றும் கோல் சென்டர்களில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படவிருந்தது.
 
வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
அமெரிக்க தொழிற்சந்தையைப் பாதிக்கக் கூடிய நடவடிக்கைகளை யூஎஸ் எயிட் நிறுவனம் மேற்கொள்ளக் கூடாதென காங்கிரஸ் சபை உறுப்பினர் பிசோப் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.