‘அண்ணனின்’ அழைப்பு-குஷியில் ‘தம்பி’ சிம்பு!

மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை சிம்புவுக்கு அளித்துள்ளாராம் அஜீத் . இதனால் குஷியாகி விட்டாராம் சிம்பு.

சிம்பு முன்பு தன்னை ரஜினி  ரசிகராக காட்டிக் கொண்டார். சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது சிலம்பாட்டம் படத்தில் பில்லா அஜீத் போல கெட்டப்பில் வந்து தனது அஜீத் பாசத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் தனது படங்களிலும் அஜீத்தை புகழும் வகையில் வசனம் வைக்கவும் தவறுவதில்லை. இந்த நிலையில், அஜீத் நடிக்கும் மங்காத்தா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்பட்டார் சிம்பு. இதுகுறித்து தனது தோஸ்த்தும் பட இயக்குநருமான வெங்கட் பிரபுவிடம் கேட்க அவரோ அஜீத்திடமே கேட்டுக்கோ என்றாராம்.

இதையடுத்து நேரடியாக ‘தல’யிடமே பேச, ‘தல’ பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்தாராம். ஆனால் அடுத்த நாள் காலையில் போனில் கூப்பிட்டு நடி தம்பி என்று கூறி விட்டாராம். இதனால் சிம்பு செம உற்சாகமாகியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.