சிறிலங்காவுக்கான பயண எச்சரிக்கையை முழுமையாக நீக்கியது கனடா

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தனது குடிமக்களுக்கு வழங்கியிருந்த பாதுகாப்பு எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லிசா மொனேற் தகவல் வெளியிடுகையில்,

“கடந்த 2009 நவம்பரில் சிறிலங்காவுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு விடுத்திருந்த எச்சரிக்கையை கனடா தளத்தியது.

ஆனால் வடக்கு,கிழக்குப் பகுதிகளுக்கு செல்வதற்கான பயண எச்சரிக்கை தொடர்நது நடைமுறையில் இருந்தது.

தற்போது சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயணம் செய்வதற்கு கனேடியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை முற்றாகவே நீக்கப்பட்டுள்ளது.

எனினும் நாங்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு மிகவும் கவனமாக இருக்கும்படி ஆலோசனை வழங்குகிறோம்.

ஆனால் அது அதிகாரபூர்வமான பயண எச்சரிக்கை அல்ல“ என்று தெரிவித்தார்.

சிறிலங்கா தொடர்பான அறிவிப்பில் கனேடிய அரசாங்கம், தனது குடிமக்களை எல்லா நேரத்திலும் தனிப்பட்ட பாதுகாப்பு வழிப்புணர்வு விடயத்தில் அதிக கவனத்துடன் இருக்குமாறும், உள்ளுர் ஊடகச் செய்திகளின் மூலம் நிலைமைகளைக் கண்காணிக்குமாறும், உள்ளுர் அதிகாரிகளின் ஆலோசனைகளை பெறுமாறும் கூறியுள்ளது.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் சில பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதும், அங்கு அவசரகாலச்சட்டம் நாடுமுழுவதும் நடைமுறையில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.