பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர்களே, சகோதரர்களே அன்பான வேண்டுகோள்!

நவம்பர் 27ம் நாள் எமது தேசத்தின் இதய தெய்வங்களான மாவீரர்களை நினைந்து  ஒளியேற்றி, மலர்கொண்டு மரியாதை செலுத்தும் புனிதநாளாகும்.

பிரான்சில் வாழ்ந்து வரும் மாவீரரின் பெற்றோர்கள், சகோதரர்கள் இந்நாளில் தமது உறவுகளின் திருவுருவப்படத்திற்கு ஆண்டுதோறும் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

அதற்கான ஒழுங்குகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.  தமது பிள்ளைகளின், சகோதரர்களின் படங்கள் இதுவரையில் எம்மிடம் வழங்காதிருப்பவர்கள்  அவற்றை எதிர்வரும் ஒக்ரோபர் 15ம் திகதி முன்னர் எமது காரியாலையத்தில் தந்துதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தொடர்புகளுக்கு : 01 43 58 11 42:    06 98 79 46 16

காலை: 9.00 மணிமுதல் 11.00 மணி  மாலை 15.00 முதல் 19.00 மணிவரை

இமெயில் – secretariatcctf@gmail.com

‘‘மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திர சிற்பிகள், எமது மண்ணின் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்

-தமிழீழத்தேசியத்தலைவர் –

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.