வட-கிழக்கில் முதலீடுகள் என்ற போர்வையில் மோசடிகளை மேற்கொள்ள இந்திய நிறுவனங்கள் திட்டம்?

சிறீலங்காவின் உட்கட்டுமான திட்டங்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வது என்ற போர்வையில் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு கிடைக்கும் நிதிகளை கையகப்படுத்த இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவின் கட்டிட மற்றும் உட்கட்டுமானத்துறைகளுக்கு முதலீடுகளை மேற்கொள்ள இந்திய நிறுவனம் முன்வந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்றை உள்நாட்டு அபிவிருத்தி நிதி நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

இந்திய நிறுவனத்தின் இந்த திட்டத்தை சிறீலங்கா அரசு ஆராய்ந்து வருவதாக சிறீலங்கா கட்டிட நிர்மாணத்துறை நிறுவனத்தின் தலைவர் சுராத் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறீலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் 154 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது. வடபகுதிக்கு என வழங்கப்பட்ட இந்த நிதியை கையகப்படுத்திக் கொள்வதில் சிறீலங்கா அரசும், இந்தியாவும் போட்டியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்படும் நிதிகளை, அபிவிருத்தி நடவடிக்கைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், உட்கட்டுமான நிறுவனங்கள் என்ற போர்வையில் இந்திய – சிறீலங்கா நிறுவனங்கள் கையகப்படுத்திக் கொள்ள போட்டியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.