கே.பியின் பிரதிநிதிகளை தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் இணைப்பதற்கு எதிர்ப்பு

தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதனின் (கே.பி.) பிரதிநிதிகளை இணைத்துக்கொள்வதற்கு மேற்படி ஒன்றியத்திலுள்ள சில தமிழ்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

கே.பியின் லண்டனைத் தளமாகக் கொண்ட சில பிரதிநிதிகள் இந்த ஒன்றியத்தின் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதை தான் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்  எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

‘நான் அதை எதிர்க்கிறேன். கே.பி. தற்போது அரசாங்கத்தின் நலன்களுக்கேற்ப செயற்படுகிறார். அவரின் பிரதிநிதிகளை எமது கூட்டங்களில் இணைத்துக்கொள்ள முடியாது. பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை இக்கூட்டங்களுக்கு அழைப்பதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதையும் நான் எதிர்க்கிறேன். அவர் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவராக உள்ளார்’ என சிவாஜிலிங்கம் கூறினார்.

தமிழ்க்கட்சிகளின் ஒன்றியத்தின் அடுத்த கூட்டம் நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.