போருக்கு பிந்திய இலங்கையுடன் நட்பை புதுப்பிக்கிறது நோர்வே!

இலங்கை அரசு- தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையிலான சமாதானப் பேச்சுக்களின்போது மத்தியஸ்தராக செயற்பட்ட நோர்வே போருக்குப் பிந்திய இலங்கையுடன் நட்பைப் புதுப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற உள்ள ஐ.நா கூட்டத் தொடரில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் கலந்து கொள்கின்றார். அங்கு அவருடன் நோர்வே நாட்டு உயர் மட்டக் குழு ஒன்று நல்லெண்ண சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளது.

அந்நாட்டுப் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும்- இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்கெய்மும் இவ்வுயர் மட்டக் குழுவில் அங்கம் வகிக்கின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.