இலங்கைத் தமிழரை குத்திக் கொன்ற யுவதிக்கு 14 வருட கடூழிய சிறை!

52 வயது உடைய இலங்கைத் தமிழர் ஒருவரை ஜேர்மனியில் கத்தியால் குத்தி இரு வருடங்களுக்கு முன் படுகொலை செய்தார் என்கிற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டிருக்கும் 24 வயது இளம் யுவதி ஒருவருக்கு பேர்ன் நகரத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. இளம்யுவதி மேற்படி இலங்கையரை Flora Park இற்கு அழைத்துச் சென்று பாலுறவு மேற்கொண்டார்.

பின் கத்தியால் குத்திக் கொன்று விட்டார். இவ்வழக்கு இடம்பெற்றபோது யுவதி நீண்ட கால மனநோயாளி என்று மன்றில் நிரூபிக்கப்பட்டது. எனவே இவருக்கு மனநல சிகிச்சை தவறாது வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த இளம்யுவதி பிறப்பால் சுவிற்சலாந்தை சேர்ந்தவர் ஆவார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.