கிளி. சாந்தபுரத்தில் மக்கள் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் தமிழ் வித்தியாலய இடைத்தங்கல் முகாமிலிருந்தவர்கள் நேற்று மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி முகாமில் 281 குடும்பங்கள் கடந்த நான்கு மாதங்களாக தங்கி இருந்தனர். யாழ் மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

மிதிவெடிகள், மற்றும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு சாந்தபுரம் தற்போது பாதுகாப்பான பகுதியாக இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.