பிரபாகரனே இன்னமும் புலிகளை வழிநடத்துகின்றார் ‐ உதய நாணயக்கார

Sri Lanka Civil Warதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே இன்னமும் யுத்தத்தை வழிநடத்திச் செல்வதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பிரபாகரன் இன்னமும் நாட்டைவிட்டு தப்பியோடவில்லை எனவும், புதுக்குடியிருப்பிலேயே அவர் மறைந்திருப்பதாக உதய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து போராட்டத்தை வழிநடத்திச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரபாகரன் பயன்படுத்தியிருக்கக் கூடிய சில பதுங்கு குழிகள் கைப்பற்றப்பட்டதாகவும், இவ்வாறான ஓர் பதுங்கு குழியில் பிரபாகரன் பதுங்கியிருக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் பிரத்தியேக பாதுகாப்புப் படையணியான ராதா படையணியும் தற்போது கள முனைக்கு இறக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.