வடக்கில் அதிகளவு பெண்கள் குடும்ப தலைமைப் பொறுப்புக்களை சுமக்கின்றனர்

வடக்கில் அதிகளவு பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை சுமப்பதாக யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பெண்கள் மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வட மாகாணத்தில் சுமார் 40,000 வீடுகளில் பெண்களே குடும்பத் தலைமைப் பொறுப்பை சுமப்பபதாகவும் இதில் 20000 பேர் யாழ்ப்பாணத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
யுத்தம், காணாமல் போதல் மற்றும் இராணுவத்தினால் தடுத்து வைத்தல் ஆகிய காரணங்களினால் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
இந்த புள்ளி விபரத் தரவுகள் மேலும் அதரிகரிக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஏனெனில் இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களின் விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு கிழக்கில் மட்டும் சுமார் 89000 கணவனை இழந்த பெண்கள் வாழ்ந்து வருவதாகத் அரசாங்கத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
 
வடக்கில் ஏதோவொரு வழியில் கணவனின் துணையை இழந்தப் பெண்கள் கூலித் தொழில்களில் ஈடுபட்டு குடும்பத்தை பராமரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.