Logitech Illuminated Keyboard K800 – இருட்டில் ஒளிரும் கீ போர்ட்: லொஜிடெக் அறிமுகம்

இருட்டில் மற்றவர்களுக்குத் தொல்லை தராமல் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர் கீ போர்டினை லொஜிடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. கே 800 என இது அழைக்கப்படுகிறது.

இந்த கீ போர்டுக்குள்ளாக கீகளை நன்கு அறியும் வண்ணம் பின்புறத்திலிருந்து வெளிச்சம் தரும் வகையில் விளக்கு உள்ளது. அறையின் ஒளிக்கேற்ற வகையில் இதன் ஒளி மாறுகிறது. கைகள் இதன் அருகே செல்கையில் ஒளிர்ந்து மற்ற நேரத்தில் இல்லாமலும் இந்த விளக்குகள் இயங்குகின்றன.

இந்த விளக்கிற்கான மின்சக்தி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் கிடைக்கிறது. இதில் உள்ள பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த கீ போர்டின் வடிவம் மிகவும் ஸ்லிம்மாக உள்ளது.

கூடுதல் வசதியாக வழக்கமான உள்ளங்கை அடிப்பக்கம் வைத்திட இடம் தரப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து இதனைப் பயன்படுத்தலாம். மின்னஞ்சல்இ இணைய உலா மற்றும் மல்ட்டி மீடியா பயன்பாடுகளுக்கென தனி கீகள் தரப்பட்டுள்ளன.

விண்டோஸ் 7 விஸ்டா மற்றும் எக்ஸ்பி சிஸ்டங்களுடன் இணைந்து இது இயங்குகிறது. இதன் நான்கு புறங்களிலும் பிளாஸ்டிக்கினால் ஆன போர்டர் தரப்பட்டுள்ளது. இதன் தடிமன் 9.3 மிமீ தான். இதன் உள்ளங்கை அமர்ந்திடும் இடத்தில் சிறிய ரப்பர் ஷீட் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் உறுதியாகக் கரங்களை இதில் வைத்துப் பயன்படுத்த முடிகிறது.

இதனால் உங்கள் கைகள் டைப் செய்திடுகையில் வழுகிச் செல்லாது. கை ரேகைகள் கீ போர்டில் பெரிதாகத் தெரியாது. இதன் ஒவ்வொரு கீயிலும் மைக்ரோ லென்ஸ் ரெப்ளக்டர் உள்ளது. இதனால் ரம்மியமான நீல நிற ஒளி கிடைக்கிறது. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். எந்தவிதமான இன்ஸ்டலேஷனும் தேவையில்லை.

ஆனால் இதன் மேலாகத் தரப்பட்டுள்ள 12 ஸ்பெஷல் கீகளுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள இதனுடன் வரும் 4.6 கேபி அளவுள்ள இன்ஸ்டலேஷன் பைலை இயக்கிப் பதிய வேண்டும். இதன் இரு கீகளுக்கு இடையே 3.2 மிமீ இடைவெளி உள்ளது. இது கைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் டைப் செய்திட உதவுகிறது.

இந்த கீ போர்டில் யு.எஸ்.பி. போர்ட் எதுவும் கொடுக்கப்பட வில்லை. இதனால் நேரடியாக கீ போர்டில் எந்தவிதமான பென் ட்ரைவினையும் இணைக்க முடியாது. ஒருவேளை இதனை ஸ்லிம்மாக வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை விட்டிருக்கலாம்.

இந்த கீ போர்டு வயர் மூலம் இணைத்துச் செயல்படும் மாடலாக மட்டுமே வந்துள்ளது. வயர் வழி இணைப்பின்றி இதனைப் பயன்படுத்த முடியாது. இரவு நேர இருட்டு ஆந்தைகள் போல கம்ப்யூட்டரில் செயல்படுவோருக்கு இந்த கீ போர்டு மிகவும் ஏற்ற ஒன்றாகும்.  விரைவில் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் இதன் விலை 100 டொலர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.