மானிட நேய நடைப்பயணம்: பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தைக் கடந்தது

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (09.09.2010) 13வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதியினூடாக தொடர்ந்து வருகின்ற நடைப்பயணம் தற்போது ஸ்ராஸ்பூர்க் நகரத்தையும் கடந்து, தொடர்ந்தும் சவேர்ன் என்ற இடத்தையும் கடந்து பயணம் தொடர்ந்து வருகின்றது. ஸ்ராஸ்பூர்க் நகர இளையோர்கள், சிறுவர்கள் தொடர்ந்தும் தமது ஆதரவினை உற்சாகத்துடன் வழங்கி வருகின்றனர்.

  • இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
  • மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
    தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து  ஓகஸ்ட் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனிவாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை  பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு  ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.