இராணுவத்தில் மேலதிக துருப்புக்களை இணைக்கத் தீர்மானம்: பொன்சேகா

sarath-ponseka-_srilankaதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில் மேலதிக துருப்புக்களை படையில் இணைக்கத் தீர்மானித்துள்ளதாக இராணுவப் படைத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அம்பேபுஸ்ஸ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவப் படையினர் புலிகளுக்கு எதிராக வெற்றிகரமாக யுத்தததை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் படையினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்படும் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்த அதிக எண்ணிக்கையிலான துருப்பினர் தேவைப்படுவதாகவும், இதன் காரணமாகவே புதிதாக இராணுவப் படைக்கு ஆட்களை இணைத்துக்கொள்ளத் தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.