18 ஆவது திருத்தச் சட்ட மூலம் ஜனநாயகக் கோட்பாடுகளை உதாசீனம் செய்யும் வகையில் அமையப் பெற்றுள்ளது ‐ அமெரிக்கா

அண்மையில் இலங்கை பாராளுமன்றில் 144 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் ஜனநாயகக்  கோட்பாடுகளை உதாசீனம் செய்யும் வகையில் அயைமப் பெற்றுள்ளதென அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் சாசன மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணான வகையிலேயே 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக  அமெரிக்கா தெரிவித்தள்ளது.

18 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தக் கூடிய சாத்தியம் ஏற்பாடாது என அமெரிக்க ராஜாங்கத்  திணைக்களப் பேச்சாளர் பீ.ஜே.க்ரொவ்லி தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி, ஜனநாயகம் மற்றும் சுயாதீன நிறுவனங்கள் ஆகிய கோட்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை  முன்னெடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய நல்லிணக்கம், நியாயமான அதிகாரப் பகிர்வு, அரசாங்க நிறுவனங்களுக்கு சுயாதீனமான முறையில் அதிகாரிகளை நியமித்தல் போன்ற  விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நல்லாட்சியை ஏற்படுத்தவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத்  திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.