உலகில் மிகப்பெரிய சொக்கலேட் (Chocolate)

ஆர்மேனியா நாட்டின் மிகப்பெரிய சொக்கலேட் தயாரிப்பு நிறுவனமான ‘கிரான்ட் கன்டி’ நிறுவனம், தனது 10ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உலகிலேயே மிகவும் பிரமாண்டமாக சொக்கலேட்டினை தயாரித்திருக்கிறது. 4,410 கிலோகிராம் நிறையுடைய இந்த ‘சொக்கலேட் பார்’ ஆனாது 25 சென்ரிமீற்றர் தடிப்பம் கொண்டது. இந்த சொக்கலேட் பாரானது 5.6 மீற்றர் நீளமும் 2.75 மீற்றர் அகலமும் கொண்டது.

70 வீதம் சொக்கலேட்டினால் தயாராகிய இதனை, தனது வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக இந்தக் கம்பனியில் பிரதம நிறைவேற்று அதிகாரி கரேன் வர்டானியன் தெரிவித்துள்ளார்.

ஆர்மேனியாவின் தலைநகர் ஜெரேவானில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மிகப்பெரிய சொக்கலேட்டிற்கு ‘உலகின் மிகப்பெரிய சொக்கலேட் தயாரிப்பு’ என்ற அங்கிகாரத்தினை, கின்னஸ் உலக சாதனை பதிவாளர்களின் பிரதிநிதி எலிசபெத் ஸ்மித் வழங்கினார்.

2007ஆம் ஆண்டு இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 3580 கிலோகிராம் நிறையுடைய சொக்கலேட்டே இதுவரை மிகப்பெரிய சொக்கலேட் தயாரிப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.