யேர்மன் பெர்லினில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2010

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில்  1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினார்.

தமிழர்களின் அடி மனதில் பதிந்த அந்த நாளை நினைவு கொள்ளும் முகமாக சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் ௧௧ வயது எல்லைகள் அற்ற கழகங்கள் பங்குகொண்டனர் .அக வணக்கத்தோடு ஆரம்பிக்க பட்டு  ,தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருஉருவ படத்துக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. பங்குபற்றிய அனைத்து கழகங்களும்  மிகவும் பண்பாகவும் சிறப்பாகவும் தமது திறமையை  காண்பித்தனர் .இத்தோடு இந்த நிகழ்வில் இரு சிறு குஞ்சுகளின் கழகங்களும் கலந்து கொண்டு சிறப்பாக பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்நிகழ்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய விளையாட்டுவீரர் பயிற்சியாளர் பார்வையாளர் நடுவர் தொண்டர் ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தியாக தீபம் லெப் கேணல் திலீபன் சுற்றுக் கிண்ண போட்டி திறம்பட நடைபெறுவதற்கு பண ஆதரவு வழங்கிய  அனைத்து  நிறுவனங்களுக்கும்   தமிழர்  விளையாட்டுத்துறை யேர்மனி பெர்லின் கிளை  நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றன. 

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்த உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2010 தின் இறுதி முடிவுகள் பின்வருமாறு:

முதலாம் இடம்: TSG Bärlin
இரண்டாம் இடம்: Tamilstars Dortmund U20 
மூன்றாம் இடம்: TSV Ennepetal
 
சிறந்த இலக்கை அடித்த  வீரர்    (Goal shooter ): Sakil “KTC Krefeld”
சிறந்த பந்துகாப்பாளர்:   V .Jeyalingam  “TSG Bärlin”
சிறந்த விளையாட்டு வீரர்: Vithu “Tamilstars Dortmund U20”
 
நன்றி 
தமிழர் விளையாட்டுத்துறை யேர்மனி பெர்லின் கிளை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.