தமிழர்களுக்காய் தமிழீழ கட்டமைப்பால் உருவாக்கப்பட்ட “தமிழ் கூட்டமைப்பின் பச்சோந்தித்தனம்”…………?

அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதம் எப்போது நடைபெறும் என்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதைவிட 18வது அரசியலமைப்புத் திருத்த விவாதமும் மறுநாள் நடைபெறவிருந்தது.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிலேயே இருக்கவில்லை. மிகவும் முக்கியமானதொரு வேளையில் இவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்ததை பொறுப்பற்ற தனம் என்பதைவிட வேறெப்படிக் கூற முடியும்?

அவசரகாலச்சட்டத்தை எதிர்ப்பதென்பது ஒரு கொள்கை ரீதியான முடிவாக இருக்கும்போது அதைவிட்டுக் கொடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது. அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணைகளில் தான் தமிழ்மக்களின் பிரச்சினைகளை அதிகளவில் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அண்மைக்காலமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவசரகாலச்சட் நீடிப்பு விவாதங்களில் பங்கேற்பதிலும். வாக்களிப்பதிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பது வெளிப்படை.

அவசரகாலச்சட்டமானது தமிழ் மக்களை எந்தளவுக்கு அழுத்திப்பிடித்து நெரித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட போதிலும் இவர்கள் அதற்கேற்றவாறு நடந்து கொள்ளத் தவறியுள்ளனர். இதற்கு மறைமுக ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வரலாற்றுப் பழியைச் சுமந்து நிற்கிறார்கள் என்றால் அது மிகையான கருத்தல்ல.

பாதிப்புக்களைச் சந்திக்கும் ஒவ்வொரு தமிழரினது வயிற்றெரிச்சலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய சர்ச்சைகள் உச்சமடைந்திருந்த கட்டத்தில் கடந்த வாரம் நடந்தேறிய ஒரு நிகழ்வு பலரதும் கவனத்தில் இருந்தும் மறைந்து போய்விட்டது.

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே ஏகமனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விடயம் தான் அது.

இலங்கையில் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கடந்த செவ்வாயன்று அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையில் இருந்துள்ளனர்.

ஆனால் அவர்களில் யாருமே இந்தப் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரவில்லை. ஒரு வேளை அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களித்து அவர்கள் களைத்துப் போயினரோ தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த அலட்சியப்போக்கை சாதாரணமானதொன்றாக எடுத்துக் கொள்ள முடியாது.

அவசரகாலச்சட்டமானது தமிழ்மக்களுக்குப் பெரிதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஒன்று.

தமிழ்மக்களின் கழுத்தை நெரிப்பதற்கென்றே அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சட்டம் அது.

தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அதை எதிர்க்கத் திராணியற்றவர்களாக இருந்துள்ளனர்.

  • அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் தனது உரையின் முடிவில் “ஜனநாயக நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அவசரகாலச்சட்டத்துக்கு எதிராக வாக்களித்து இந்த சபையின் பெருமையை காப்பாற்றுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் அவர். ஆனால் கடைசியில் அவரோ அல்லது அவரது சக நாடாளுமன்ற நண்பர்களோ அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடக் கோராமல் இருந்து விட்டனர்.

இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக இப்படி மௌனம் காத்தது என்பதற்கு எந்த விளக்கத்தையும் கொடுக்க முடியாது.

வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் ஐதேகவினர் யாரும் இருக்கவில்லை. ஜனநாயக தேசிய முன்னணியினர் சிலர் தான் இருந்தனர்.

அவர்கள் எல்லோரையும் விட இந்த அவசரகாலச்சட்டத்தை எதிர்க்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே இருக்கிறது.

எத்தனையோ நெருக்கடிகள் இருந்தபோதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தனியாக அவசரகாலச்சட்டத்துக்கு எதிராக வாக்களித்து வந்தது.

அப்படி நிலைநாட்டிய பெருமைகளையெல்லாம் இப்போது ஒரே நொடியில் போட்டுடைத்து விட்டு நிற்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

முக்கியமான அந்தத் தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காண்பித்த மௌனத்தினால் அவசரகாலச்சட்டத்துக்கு அவர்களும் அங்கீகாரம் வழங்கியதான அர்த்தத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த வரலாற்றுப் பழியில் இருந்து அவர்களால் ஒருபோதும் விடுபட முடியாது.

அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளது இதை எதிர்த்தால் என்ன எதிர்க்கா விட்டால் என்ன இஅது நிறைவேறுவது நிச்சயம் தானே என்று யாரும் நினைக்கலாம்.

ஆனால் அது தவறான கருத்து.

இப்படிப்பட்ட நியாயத்தைக் கூறுவதற்காக தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தமது பிரதிநிதிகளாக அவர்களைத் தெரிவு செய்திருக்கவில்லை.

அப்படியான நியாயத்தைக் கூறுவார்களேயானால் அவர்கள் இருக்க வேண்டியது அரசாங்கத் தரப்பாகவே இருக்க முடியும்.

ஐதேகவினரும், ஜேவிபியினரும் வெளியே போன பிறகு நாம் எதற்குத் தனித்து நின்று எதிர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் அது தவறானது.

  • அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான அரியநேந்திரன்,18வது திருத்தம் பற்றிக் குறிப்பிடும் போது “ஐதேக எதிர்ப்பதால் நாம் எதிர்க்கவோ முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதால் நாம் ஆதரிக்கவோ முடியாது” என்று கூறியிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் ஐதேக வினர் இல்லையென்பதால் வாக்கெடுப்பைக் கோராது போனதாக கூறமுடியாது.

ஐதேகவினர் அவசரகாலச்சட்டத்துக்கு எதிராக வாக்ளிக்கத் தொடங்கி இரண்டு மாதம் கூட ஆகவில்லை.

அதேவேளை, ஐதேகவுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடத்தவும் இல்லை அதற்காக தமிழ் மக்கள் அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவும் இல்லை.

அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதம் எப்போது நடைபெறும் என்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதைவிட 18வது அரசியலமைப்புத் திருத்த விவாதமும் மறுநாள் நடைபெறவிருந்தது.

இந்தக் கட்டத்தில்,

  1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டிலேயே இருக்கவில்லை. மிகவும் முக்கியமானதொரு வேளையில் இவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்ததை பொறுப்பற்ற தனம் என்பதைவிட வேறெப்படிக் கூற முடியும்?
  2. அவசரகாலச்சட்டத்தை எதிர்ப்பதென்பது ஒரு கொள்கை ரீதியான முடிவாக இருக்கும்போது அதைவிட்டுக் கொடுக்கும் விதத்தில் நடந்து கொண்டதற்கு எந்தக் காரணத்தையும் கூற முடியாது. அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணைகளில் தான் தமிழ்மக்களின் பிரச்சினைகளை அதிகளவில் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
  3. ஆனால் அண்மைக்காலமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவசரகாலச்சட் நீடிப்பு விவாதங்களில் பங்கேற்பதிலும். வாக்களிப்பதிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பது வெளிப்படை.

அவசரகாலச்சட்டமானது தமிழ் மக்களை எந்தளவுக்கு அழுத்திப்பிடித்து நெரித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட போதிலும் இவர்கள் அதற்கேற்றவாறு நடந்து கொள்ளத் தவறியுள்ளனர்.

இதற்கு மறைமுக ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வரலாற்றுப் பழியைச் சுமந்து நிற்கிறார்கள் என்றால்அது மிகையான கருத்தல்ல.

“அரசியலமைப்பின் 18வது திருத்தத்தை ஐதேக எதிர்ப்பதானால் அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் ஒதுங்கி நிற்கக் கூடாது. இல்லையேல் அதற்கு ஆதரவளித்தாகவே கருதமுடியும் ”என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கடந்த புதனன்று சபையில் விமர்சித்தார்.

ஐதேக மறுநாள் செய்த தவறைச் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தாம் முதல் நாள் செய்த தவறு மறந்துபோனது வியப்புக்குரியதே.

அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் கையாண்ட நழுவல்போக்கும் கூட அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக பியசேன எம்.பி வாக்களிப்பதற்குக் காரணமாகியிருக்கலாம்.

அரசியலமைப்புத் திருத்த யோசனையை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணையின்போது மௌனம் காத்த விடயமானது அரசியல் ரீதியாக விடப்பட்ட மிகப்பெரிய தவறு.

இந்த மாதம் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு உபயகாரர் தான்.

இந்தவகையில், இந்த மாதம் அவசரகாலச்சட்டத்தினால், பாதிப்புக்களைச் சந்திக்கும் ஒவ்வொரு தமிழரினது வயிற்றெரிச்சலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

சத்திரியன்
இன்போதமிழ் குழுமம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.