எம்.வி.சன்.சி தமிழரின் விபரங்கள் திருட்டு!

கனேடிய தமிழர் பேரவையின் அலுவலகத்துக்குள் புகுந்த சில தீய சக்திகள் எம்.வி.சன்.சி.கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் 492 இலங்கைத் தமிழர்கள் தொடர்பான விபரங்களை திருடிச் சென்றுள்ளன என்று அப்பேரவை குற்றஞ்சாட்டி உள்ளது.

இத்திருட்டு சனிக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது என்றும் இத்தமிழர்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் அடங்கிய கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது என்றும் அப்பேரவை தெரிவித்துள்ளது.

இத்தமிழர்கள் குறித்த ஆவணங்கள் மாத்திரமே திருடப்பட்டிருக்கின்றன என்றும் இது ஒரு திட்டமிட்ட திருட்டு வேலை என்றும் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்தார். ரொரன்ரோ பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.