கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஐ.நா. பார்வையிடவுள்ளது

கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு பார்வையிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் நிதி உதவியின் கீழ் ஐக்கிய நாடகளின் முகவர் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கண்காணிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி நீல் பூணே தலைமையிலான குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
 
கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு சந்திக்கத் திட்டமிட்டுள்ளது.
 
தோப்பூர், சுமேதாங்காரபுர, பூநகர், மாவைச்சேனா உள்ளிட்ட கிராமங்களில் மீள் குடியேற்றப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், கிள்ளிவெடி பிரதேச இடம்பெயர் முகாமையும் அவர்கள் பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் விஜயம் செய்து பார்வையிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து இன்று காலை 18 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து  இன்று காலை 18 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுள் பெண்ணொருவரும் அடங்குவர். தேசிய சிறைக்கைதிகள் வாரத்தையொட்டி இறுதிநாளான இன்று இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தெரிவித்ததார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.