புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் ஆகியன வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டன ‐ இராணுவப் பேச்சாளர்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் ஆகியன வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

200 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மீட்கப்பட்டதாகவும் அந்த தங்கத்திற்கு என்ன நேர்ந்ததென்பது இதுவரையில் அம்பலமாகவில்லை எனவும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
 
மீட்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் ஆகியன துஸ்பிரயோகம் செய்யப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சில தனிப்பட்ட இராணுவ வீரர்கள் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையிட முற்பட்ட போதிலும் அந்த முயற்சிகளுக்கு இடமளிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மீட்கப்பட்ட பணமோ அல்லது நகையோ களவாடப்பட்டதென்ற குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.