பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா பற்றி மக்களவையில் கேள்வி எழுப்ப உள்ளனர்

வெளிநாட்டு மற்றும் பொதுநலநாட்டு அலுவலகத்தின் கோடைக்கால ஓய்வு இடைவேளையை அடுத்து, செப்தெம்பர் 14ம் நாள் நடைபெறவுள்ள முதலாவது வாய்வழிக் கேள்வி நேர அமர்வின் போது சிறிலங்காவில் தற்போது நிலவும் மனித உரிமை நிலைமை ஒளியிட்டுக் காட்டப்படவுளது.

வெளிநாட்டுச் செயலர் அதி மாண்புமிகு விலியம் ஹேக், நா.உ., அவர்களும் பிற வெளிநாட்டு அலுவலக அமைச்சர்களும் இந்நிகழ்வின்போது கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.

அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமானது முன்னாள் போராளிகளெனக் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை அணுகுவதற்கான அனுமதி, மனித உரிமைகள் தொடர்பாகப் பிரித்தானிய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையேயான கலந்துரையாடல்கள் கடைசியாக எப்போது நிகழ்ந்தன, தடுப்பு முகாம்களிலுள்ள தமிழரின் நிலை பற்றிப் பிரித்தானிய அரசுக்கும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. அமைப்பின் உயர் பிரதிநிதிக்குமிடையேயான கலந்துரையாடல்கள் கடைசியாக எப்போது நிகழ்ந்தன ஆகிய கேள்விகளுக்கும் பிற கேள்விகளுக்கும் இவர்கள் பதிலளிப்பார்கள்.

இந்தக் கேள்விகளும் இவற்றின் தொடர்ச்சியான துணைக் கேள்விகளும் சிறீலங்காவுடனான பிரித்தானிய அரசின் தற்போதைய உறவு பற்றிய நிலைப்பாட்டையும தமிழரின் அவல நிலை பற்றிய அதன் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவனவாக அமையும். மேலும், இலங்கைத் தீவில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கோடிட்டுக் காட்டுவதற்கும் அங்கு நிலவும் மனித அவலத்தைத் தீர்க்கவேண்டிய தேவைக்கும் நாடாளுமன்றத்தில் நிலவும் தீவிர ஆதரவை வலியுறுத்திக் காட்டுவனவாக இவை அமையும்.

இக்கேள்விகளுக்கான பதில் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த வாரம் உலகத் தமிழர் பேரவை மேலுமொரு அறிக்கையை வெளிவிடவுளது.

ஊடகத் தொடர்பு: சரா நாதன்
தொலைபேசி: 1 917 512 2992
மின்னஞ்சல்: media@globaltamilforum.org

ஆசிரியர் குழுக் குறிப்பு:

உலகத் தமிழர் பேரவையானது உலகளாவிய தமிழ் அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பாகும். பேரவை உறுப்பினர், நலன் விரும்பிகள் ஆகியோரினதும் அனைத்துலக அரசுகள், நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிலுள்ள முக்கிய முடிவெடுப்பவர்கள் ஆகியோரினதும் அறிவையும் திறமைகளையும் ஒன்று திரட்டி, சிறீலங்காவில் இன்னலுறும் தமிழரது துயர்போக்கவும ; அவர்களது தன்னாட்சி உரிமையை முன்னெடுப்பதற்கு அனைத்துலகச் சட்டங்கள், அவற்றின் கூட்டு ஒப்பந்தங்ககள், பொதுவிணக்க
ஒப்பந்தங்கள் ஆகியவற்றிலுள்ள மக்களாட்சிக்குரிய சட்ட வரம்புகளுக்கமைய உழைத்து வருகின்றது. இப்பேரவை 2009 இல் அனைத்துலகத் தமிழ்ச் சமூக அமைப்புகளின் உதவியோடு தொடங்கப்பட்டது. எமது நோக்கம் மற்றும் குறிக்கோள் ஆகியனவற்றை அறியத் தயவுசெய்து info@globaltamilforum.org உடன் தொடர்புகொள்ளவும் அல்லது www.globaltamilforum.org ஐ பார்க்கவும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.