அச்சுவேலியில் விவசாயி ஒருவர் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்

யாழ் அச்சுவேலிப்பகுதியில் விவசாயி ஒருவர் நேற்றுக் காலை கடத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

44 வயதுடைய கே. சிவகுமார் என்கின்ற விசவாயி அவரது நெற்செய்கைப் பிரதேசத்தில் வைத்தே கடத்தப்பட்டதாக  யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை வானில் சென்ற சிலர் இவரைக் கடத்திச் சென்றதாகவும் பின்னர் யாழ் நகரப்பகுதியில் விடுவித்தாகவும் கூறப்படுகின்றது.
 
முதலாவதாக 2 லட்சம் கப்பம் கோரப்பட்டதாகவும் பின்னர் 1 லட்சம் கோரப்பட்டதாகவும் முன்னுக்குப்பின் முரணாண தகவல்கள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இவர் கப்பம் கொடுத்த பின்னரா விடுவிக்கப்பட்டார் எனும் தகவல்கள் வெளியாகவில்லை.
 
நேற்றுக் காலை கடத்தப்பட்ட இவர் நேற்று மாலையே விடுவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக அச்சுவேலி காற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் மீண்டும் கடத்தல்கள் தொடங்கியிருப்பது அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இதனிடையே இந்த கடத்தல் கப்பம் தொடர்பில் உள்ளுரில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும்யாழ் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.