ஆப்கான் கைதிகள் மீது தாக்குதல்! ஐந்து இலங்கைத் தமிழர்கள் மீது வழக்கு

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆகியோருக்கு இடையில் கடந்த வருடம் நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக இன்று Perth நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.

நீதிவான் Steven Malley இவ்வழக்கை விசாரித்தார். அப்பாவிகளான ஆப்கான் கைதிகளை ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர், ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்தனர் என்று தமிழ் கைதிகள் ஆறு பேருக்கு எதிராக அரசுத் தரப்பால் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆயினும் போதிய ஆதாரம் இல்லாமையால் ஆறாவது சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டை நீதிவான் நிராகரித்தார். ஆனந்தரஜீவன் தங்கராசா,கோகுலகுமார் சுப்பிரமணியன், பிரணவன் சிவசுப்பிரமணியம், ,ஞானராஜா யேசுராஜா, அன்புராஜன் அன்ரன் ஆகியோரே மற்றைய சந்தேகநபர்கள் ஆவர்.

இக்கலவரத்தில் 200 கைதிகள் வரை பங்குபற்றி இருந்தார்கள் என்று மன்றுக்கு அரசுத் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.