25 உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
 
இவ்வாறான ஓர் தீர்மானம் குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகரோ அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவோ இந்தத் தீர்மானம் குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், தமக்கு அது குறித்து எந்தவிதமான தகவல்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
 
ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல உறுப்பினர்கள் இந்தத் தகவலை மறுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், இவ்வாறான ஓர் தீர்மானத்தை கட்சி உறுப்பினர்கள் எடுத்திருந்தால் அது குறித்து கட்சியின் செயறக்குழு கூடி ஆராயும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை தாம் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.