கனடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டமை குறித்து வொய்ஸ் ஒவ் கியூமானிட்டி அமைப்பு கவலை தெரிவிப்பு

கனடா, ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள கனடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டமை குறித்து ரொறன்ரோவில் இயங்கிவரும் மேற்படி மனித நேய அமைப்பான வொய்ஸ் ஒவ் கியூமானிட்டி பணிப்பாளர் சபை தனது கவலையை தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக மேற்படி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் மக்களின் குரலாக தற்போது ஒலித்து வரும் கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு நல்ல பல பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனாலும் இங்குள்ள சில புல்லுருவிகள் அந்த அமைப்பின் நல்ல நோச்கங்களை கொச்சைப்படுத்தியும் கண்டித்தும் வருகின்றனர். இது ஒரு ஏற்புடையதான செயலல்ல.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கனடிய தமிழ் காங்கிரஸின் தலைமை அலுவலகம் இரவு நேரத்தில் தாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல முக்கிய தகவல்கள் அடங்கிய கோவைகளும் களவாடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு யார் பொறுப்பாளிகளாக இருந்தாலும் அவர்கள் இவ்வாறான சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுவது விரும்பத்தக்க கூடிய செயல் அல்ல. கருத்து முரண்பாடுகள் இருந்தால் அவற்றை பேசித்தீர்க்கலாம். அதை விடுத்து வன்முறைகளில் ஈடுபடுவதை எமது கண்டிக்கின்றது. அத்துடன் தனது கவலையையும் தெரிவிக்கின்றது.

இவ்வாறு மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.