கட்சிதாவிய பியசேனா மகிந்தவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கடிதம் அம்பலம்!

இவ் வருடம் மே மாதம் இறுதிப் பகுதியில் பியசேன தான் மகிந்தவுடன் சேரவிருப்பம் எனத் தெரிவித்து எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பியசேன கையெழுத்தும் அவர் அலுவலக முத்திரையும் போடப்பட்டுள்ளது. அவர் சுமார் 4 மாதத்திற்கு முன்னரே மகிந்தவுக்கு எழுதிய கடிதம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னரே சிலர் தகவல் கொடுத்துள்ளனர், இருப்பினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்பீடம் இதுகுறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

இக் கடிதத்தை இலங்கையில் இருக்கும் நபர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து பியசேன சரியான விளக்கம் எதனையும் கொடுக்க மறுத்துவிட்டார். கடந்த சில மாதங்களாக, கூட்டமைப்பின் உள்ளக செயல் திட்டங்களையும், நிகழ்ச்சி நிரலையும் இவர் அரச தரப்புக்குக் கூறிவந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இக் கடிதத்தை முழுமையாக ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.