இவ்வளவு சான்றுகளிருந்தும் ஏற்க மறுக்கும் சர்வதேசம் நாளை நடக்கவிருக்கும் அமைதி படுகொலைகளை அவர்களின் புதைகுழிகளில் முளைக்கும் புற்களை வைத்தா எண்ணப்போகிறது?

euusflagsberlaymont1மாபெரும் இன அழிப்புக்கு தயாராகும் ஸ்ரீ லங்கா அரசு

தமிழ் மக்கள் படுகொலைகளை ஒரு திடகாத்திரமாக நன்கு திட்டமிட்ட வகையில் (systematic organized Tamil genocide) செய்து வரும் ஸ்ரீ லங்கா அரசு, யுத்த நிறுத்தம் செய்வதுபோல மிகச்சிறந்த நாடகமாடி, மக்கள் பகுதியிலோ பாதுகாப்பு வலியங்களிலோ அல்லது வைத்திய சாலைகளிலோ குண்டுமாரி பொழியவில்லை என்று புயல் பிரச்சாரங்களையும் செய்து வருகின்றது.

இத்தனை படுகொலைகள் நிறைவேறிய பின்னரும், மீண்டும் மீண்டும் வைத்தியசாலைகள் கிளஸ்டர் குண்டுகள் மூலமும், பல்குழல் பீரங்கி மூலமும் தாக்கப்பட்டு அதன் காணொளி,புகைப்படங்களை இன்டர்நெட் மூலமாக உலகிற்கு அனுப்பிய பின்னரும் ஐநா பேச்சாளர் கோர்டன் வேய்ஸ் சொல்கிறார் வைத்திய சாலைகள் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் அதை ஏவியவர்கள் யார் என்று தெரியாதென்று. நாம் தமிழர்கள் அதை நினைத்து கவலை அடையவில்லை. இப்போதாவது வைத்தியசாலைகள் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகின்றது என்ற செய்தியை உலகிற்கு சொல்கிறார் என்று தமிழர் நின்மதி அடைகிறார்கள். ஆனால் இச்சாவுகளுக்கு நாம் பொறுப்பல்ல என்று ஸ்ரீ லங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கர நாணையம் இன்றிச் சொல்கிறார். இது BBC இன் செய்தி.

எனினும் தமிழ் அமைப்புகளினதும் வன்னியில் உள்ள மக்களின் கணக்குப்படி சுமார் 350,000 (350 ஆயிரம்) தமிழ் மக்கள் அங்கு அகதிகளாய் நிர்கதியற்று வாழ்கிறார்கள். எனினும், ஐநாவின் கூற்றுப்படி அங்கு 250,000 மக்கள் இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீ லங்கா அரசு அங்கு 120,000 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்கின்ற்ரர்கள் என்று பறை சாற்றுகின்றது. இன்றைய நிலையில், வன்னியில் தொலைத்தொடர்பு இன்டர்நெட் வசதிகளும் இருக்கும் நிலையில் இந்த அகோர கொலைவெறி ராணுவத்தின் உண்மையான வெறியாட்டத்தை மேற்குலக தமிழ் சமூகம் பார்க்ககூடியதாக இருக்கின்றது. ஆயிரம் துப்பாக்கிகளை விட இந்த இன்டர்நெட் வசதி இனவெறி ஸ்ரீ லங்கா அரசுக்கு ஒரு பெரும் இடையூறாய் இருக்கின்றது. ஏனெனில், இந்த வீடியோ காட்சிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நெஞ்சினில் வேல்பாய்ச்சுவது மட்டுமன்றி ஞாயம் பக்கம் நிற்கும் மனிதாபிமானம் படைத்த எந்த மனிதனின் நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. பௌத்த மதத்தில் புத்த பகவான் இதைச்சொல்லவில்லை. ஞாயத்தின் பக்கம் நிற்கும் எந்த ஒரு சிங்கள பிரயையின் மனச்சாட்சியையும் இது வரலாற்றில் உலுக்கும்.

செத்துக் கிடக்கும் பச்சிளம் குழந்தைகளும், கை கால் துண்டிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களும் இராணுவத்தின் மொழியில் புலிகளாம்.

இனப்படுகொலையை திட்டமிட்ட வகையில் செய்துவரும் இந்த சிங்கள இராணுவம், மீதி நிலத்தை கைப்பற்றிவிட்டால், இந்த இன்டர்நெட் சேதிகள் எல்லாம் நின்றுவிடும். அப்போது, ஐயோ என்ற செம்மணியின் கதறல் ஒலி பரந்தனைத்தன்னும் தாண்டாது.

புதுக்குடியிருப்பும், பரந்தனும், வவுனியா அகதிமுகாமும், இன்னும்பல செம்மணிகளாகும். ஸ்ரீ லங்கா இராணுவம் இன்று சொல்லும் 120,000 கணக்கு சரியாகும் வகையில் (350,000 – 120,000 = 230,000) 230,000 செம்மணி புதைகுழி நிகழ்வு அமைதியாக அரங்கேறும். இன்று இவ்வளவு இவ்வளவு சான்றுகளிருந்தும் ஏற்க மறுக்கும் சர்வதேசம் நாளை நடக்கவிருக்கும் அமைதி படுகொலைகளை அவர்களின் புதைகுழிகளில் முளைக்கும் புற்களை வைத்தா எண்ணப்போகிறது?

எம்மினிய உறவுகளே, இன்று நாம் புலம்பெயர்ந்த நாடுகளில் கதறாவிட்டால், எம்முறவுகளின் கதறல் என்றுமே எமக்குக் கேட்டப்போவதில்லை. இன்று எமக்குதவ யாரும் வராவிட்டால் என்றுமே யாரும் எமக்காய் கொடிதூக்கப் போவதில்லை.அழுது பயனில்லை. இன்றே எம்முறவுக்காய் குமுறிடவாரீர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.