பிரணாப்முகர்ஜி விரைவில் சிறிலங்கா பயணம்

இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கிலேயே அவர் சிறிலங்கா செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் கொழும்பு சென்றிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுக்களில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு ஒன்று குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சு நடத்தவுள்ளதாகவும் புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.