கிறிஸ்மஸ்தீவு வன்முறை – வழக்கிலிருந்து மற்றொரு ஈழத்தமிழரும் விடுவிப்பு

கிறிஸ்மஸ் தீவு வன்முறைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு ஈழத்தமிழரையும் அவுஸ்ரேலிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கடந்தவருடம் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு நிலையத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு எட்டு ஈழத்தமிழர்கள் மீது பேர்த் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் விசாரணைளில் ஏற்கனவே இரண்டு ஈழத்தமிழர்கள் மீது சாட்சியங்களை முன்வைக்க முடியவில்லை என்று கூறி அரசதரப்பு சட்டத்தரணி அவர்கள் மீதான குற்றசாட்டுகளை விலக்கிக் கொண்டார்.

இந்தநிலையில் கணேசலிங்கம் சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் வலுவற்றதாக இருந்தால் அவரையும் பேர்த் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இதையடுத்து தற்போது இந்த வன்முறைச் சமபவம் தொடர்பான ஐந்து ஈழத்தமிழர்கள் வழக்கை எதிர்நோக்கியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.