தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைத்து வன்னிக்குச் செல்லும் ஜே. சிறீரங்கா

வன்னிப்பகுதிக்கு நேற்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜே ஸ்ரீரங்கா கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக சேறு பூசும் பிரச்சாரங்களை வேகமாக முன்னெடுத்து வருகின்றார். இலங்கை அரசின் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இன்று வன்னிப்பகுதிக்கு விஜயம் செய்திருந்தது. இந்தக் குழுவுடன் ஜே ஸ்ரீரங்காவும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பலரையும் சந்தித்திருந்த இவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோருக்கெதிரான பல்வேறு  கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
 
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கான உதவிகளை வழங்க கூட்டமைப்புத் தவறி விட்டதாக ஜே ஸ்ரீரங்கா குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜே ஸ்ரீரங்கா தற்போது அரசுடன் சேர்ந்து இயங்கி வருவது தெரிந்ததே. இதனிடையே ஜே ஸ்ரீரங்காவின் இந்தக் குற்றச் சாட்டுக்கள் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.
 
தமக்கான உதவிகளை வழங்க அல்லது அது பற்றிக் கூறத் தயங்கும் அரசு தம்மை சொந்த இடங்களுக்கு செல்லக் கூட அனுமதி மறுக்கும் அரசு இவ்வாறு ஜே ஸ்ரீரங்கா போன்றவர்கள் மட்டுமே வந்து தமக்காக பிரச்சாரம் செய்வதை எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றது என அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தனது தொலைக்காட்சி ஊடகங்கள் ஊடாக மக்களிடையே தன்னை இனம் காட்டிய ஜே ஸ்ரீரங்கா தற்போது தான் நேர்மையாகச் செயற்படுகின்றாரா என்பதை முதலில் கூறிய பின்னர் கூட்டமைப்பினரை விமர்சிக்க வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தரப்பிலும் சீற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புத்தா என மகிந்தவால் அன்பாக அழைக்கப்படும் ஜே ஸ்ரீரங்கா ஆரம்பத்தில் இருந்தே  மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் மறைமுகமாக செயற்பட்டு வந்த நிலையில் தற்போது தனது மகிந்த விசுவாசத்தை வெளிப்படையாக    நடைமுறைப்படுத்த ஆரம்பித்து உள்ளதாக பலரும் அதிர்ப்த்தி வெளியிட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.