சன் சீ கப்பலில் பயணித்த தாய் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது

எம்.சீ. சன் சீ கப்பலின் ஊடாக பயணித்து கனடாவை அடைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவைச் சேர்ந்த தாய் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.

முதல் தடவையாக குறித்த கப்பலைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
 
அடைக்கலம் வழங்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, அடைக்கலம் கோரிய மற்றுமொரு தாய் மற்றும் குழந்தைக்கு கனேடிய அதிகாரிகள் அடைக்கலம் வழங்க மறுத்துள்ளனர்.
 
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் திருப்தி அளிக்கவில்லை என கனேடிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
கப்பலில் பயணித்த பெருமளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவற்றின் உண்மைத் தண்மை குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இலங்கை அரசாங்க அதிகாரிகளிடையே ஊழல் மோசடி காணப்படுவதனால் இவ்வாறான ஆவணங்களைப் போலியாக பெற்றுக் கொள்வதில் சிரமமிருக்காதென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.