களவாடப்பட்ட கணணியில் சன் சீ கப்பல் அகதிகளின் பெயர்கள் இல்லை: டேவிட் பூபாலபிள்ளை

கனேடிய தமிழ் காங்கிரஸ் காரியாலயத்தில் இருந்து திருடப்பட்ட கணணியில் சன் சீ கப்பல் அகதிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸின் காரியாலயம் கடந்த சனிக்கிழமை உடைக்கப்பட்டு சன் சீ கப்பலில் வந்த 492 அகதிகளின் ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த கணனி களவாடப்பட்டது.

இதில் அகதிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் அவ்வாறு அதில் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனடாவுக்கான இலங்கை இராஜதந்திர தரப்பு சன் சீ கப்பல் கனடாவுக்கு வருவதற்கு முன்னரே எச்சரிக்கையை விடுத்திருந்த போதிலும்,  அதனை கனேடிய அரசாங்கம் கருத்திற் கொள்ளவில்லை என கனேடிய அரசியல் வாதி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.