கோணேஸ்வரம் கோயில் பாறையிலிருந்து குதித்து குடும்பஸ்தர் தற்கொலை!

திருகோணேஸ்வரம் கோயிலுக்கு அருகிலுள்ள பாறையிலிருந்து கடலில் குதித்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. திருகோணமலை பிறிமா நிறுவனத்தில் தொழில் புரியும் பெசல் பெரந்த  (வயது 38) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். குடும்பத் தகராறு காரணமாக இவர் தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.