லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் ஏர்ல் குணசேகரவின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது – ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் ஏல் குணசேகர ஆகியோரின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
18 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த ஆறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் குறித்த இருவரும் அடங்குகின்றனர்.

திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த ஏனைய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓரே நாளில் மறுசீரமைப்பு பணிகளை நிறைவேற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும், மறுசீரமைப்பு பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இளம் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.