எமது அறிக்கை சரியானது: சிறிலங்காவுக்கு ஐ.நா. பதிலடி

unபோர்க் குற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்கள் சரியானது என ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நவநீதம்பிள்ளையின் கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தின் பேச்சாளர் றூபெட் கொல்விலி தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள போதும் இலங்கையின் வடபகுதியில் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பாக நாம் வெளியிட்ட அறிக்கை சரியானதே.

சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை பலதரப்பு தகவல்களுடன் ஒப்பிட்ட பின்னரே அறிக்கை வெளியிடப்பட்டது.

எனவே கடந்த வெள்ளிக்கிழமை எமது அலுவலகம் வெளியிட்ட தகவல் சரியானது என்றார் அவர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.