முல்லைத்தீவு நகர்ப் பகுதியின் மையத்தில் புதிதாக புத்தவிகாரை கட்டும் பணி ஆரம்பம்?

முல்லைத்தீவு நகர்ப் பகுதியின் மையத்தில் புதிதாக ஒரு புத்தவிகாரை கட்டும் பணியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் பணிக்காக ஒரு பௌத்த துறவி நியமிக்கப்பட்டு அவருக்கு இராணுவப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தடுத்து நிறுத்தும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் புத்தவிகாரைகள் கட்டப்பட்டுள்ளன. இந்து வழிபாட்டுத் தளங்கள் பெருமளவு நிர்மூலமாக்கப்பட்டு பாழடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் புதிதாக புத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்து  கடுமையான அதிர்ப்திகள் வெளிக்கிழம்பியுள்ளன.

குறிப்பாக  இது ஒரு திட்டமிட்ட கலாசார அழிப்ப்பாகவும் ஆக்கிரமிப்பாகவும் ஆழும் தரப்பினால் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.