இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரித்தானியா அறிவிப்பு

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
 
இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெற்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கிற்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலிஸ்டயர் புர்ட் தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை விவகாரங்கள் குறிப்பாக கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வார்த்தைகளினால் அளிக்கப்படும் உறுதி மொழிகளை விடவும், நடைமுறையில் அவை செயற்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இடம்பெயர் மக்களுக்காக பிரித்தானிய அரசாங்கம் 13.5 மில்லியன் பவுண்ட்களை உதவியாக வழங்கியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.