அமெரிக்கத் தூதுவருக்கும் ஊடக அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினிசிற்கும், ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
 
18 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் இலங்கை வெளியிட்ட மறுப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை அமெரிக்காவிற்கு அறிவித்துள்ளதாக புட்டினிஸ் தெரிவித்துள்ளார்.
 
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பிலான தகவல்கள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, அமெரிக்காவின் கருத்து தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை மீளவும் தெளிவுபடுத்தியதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
எதிர்கால ஊடக நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
18 ஆவது திருத்தச் சட்ட மூல நிறைவேற்றம் ஜனநயாக விழுமியங்களுக்கு முரணானதென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில் கண்டனம் வெளியிட்டிருந்தது.
 
நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற விதத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என இலங்கை அமெரிக்காவிடம் கோரியிருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.