கனடாவில் வன்தட்டு திருட்டு – குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்

கனேடிய தமிழர் பேரவையின் பணியகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினியில் இருந்து வன்தட்டு திருடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபய மெடவெல கருத்து வெளியிடுகையில்,

“இது சிறிலங்கா இராணுவத்துக்கு களங்களத்தை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சியாகும்.

வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைக் குழப்பும் நோக்கிலேயே சிறிலங்கா இராணுவத்தின் மீது சில பிரிவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

கனேடிய தமிழர் பேரவையின் பணியக்தில் இடம்பெற்ற வன்தட்டு திருட்டுக்கும் சிறிலங்கா புலனாய்வாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை“ என்று தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.