நேர்மையான முறையில் வரும் அகதிகளுக்கு கனடாவில் நிச்சயம் புகலிடம்

நேர்மையான முறையில் வருகின்ற அகதிகளை முழுமனதுடன் வரவேற்கக் கனடா காத்திருக்கின்றது என்றும் சட்டத்துக்கு புறமபான வழியில் பிரவேசிக்க முயல்கின்றவர்களே தடுத்து நிறுத்தப்படுவர் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் ஜெசோன் கென்னி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

”அகதி அந்தஸ்து கோரி சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு புறப்படுகின்றவர்களைத் தடுத்து நிறுத்த புதிய சட்டங்களை கனேடிய அரசு கொண்டு வராது.

தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற சட்டங்கள் மூலமாகவே இவர்கள் தடுத்து நிறுத்தப்ப்டுவார்கள். அகதிகளாக வரும் மக்களுடன் கடுமையாக நடந்து கொள்வது பிரச்சினைக்குத் தீர்வு ஆகாது.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.