சிறீலங்காவில் ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்த மகிந்தா முயற்சிக்க வேண்டும்: அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு

சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் நடைமுறைப்படுத்தப்படுவதை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அனுமதிக்க வேண்டும் என அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (13) ஒஸ்ரியாவில் உள்ள வியன்னாவில் நடைபெற்ற இந்த அமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில் சிறீலங்கா தொடர்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் ஊடக சுதந்திரம் ஏற்படுவதை அரச தலைவர் உறுதிப்படுத்த வேண்டும். சிறீலங்கா அரசு அண்மையில் கொண்டுவந்துள்ள 18 ஆவது திருத்தச்சட்டமும் ஊடக சுதந்திரத்தை சீரழிக்கும் நடவடிக்கையாகும். அரச தலைவருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது ஊடக சுதந்திரத்திற்கு ஆபத்தானது.

சிறீலங்கா அரசு ஊடகங்கள் மீது தடைகளையும், அழுத்தங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. பயங்கரவாதத் தடுப்புச்சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றன கண்டனத்திற்குரியவை. சிறீலங்காவில் பெருமளவான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கொலையாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.