போப்பாண்டவர் முன்னிலையில் சிவந்தன் கோரிக்கை!

போப்பாண்டவர் பெனடிக்  இன்று ஸ்காட்லாந்து (Scotland)) செல்லவுள்ள நிலையில் அங்கே சுமார் 1 லட்சம் கத்தோலிக்கர்கள் கூடும் நிகழ்ச்சி, நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கால்நடைப் பயணம் மேற்கொண்ட சிவந்தன் தனது கோரிக்கைகளை முன்வைத்து துண்டுப்பிரசுர போராட்டத்தை நடத்தவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்களுக்காக நீதி கேட்டு சிவந்தன் துண்டுப் பிரசுரங்களையும் வினியோகிக்கவுள்ளார். 1995 ல் யாழ் நவாலி கத்தோலிக்க தலம் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடாத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் நினைவுகூரும் விதமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்!

இலங்கையில் தொடர்ச்சியாக பல கிறிஸ்தவ தேவாலயங்களும் மற்றும் குறிப்பாக கத்தோலிக்க தேவாலயங்களும் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளன. சிங்கள இராணுவம், சிங்கள மக்கள், உட்பட பௌத்த பிக்குகள் கூட தேவாலயங்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

இவற்றை ஆதாரபூர்வமாக போப்பாண்டவர் முன்னிலையில் வெளிப்படுத்த சிவந்தன் எடுத்துள்ள முயற்சியை இணையம் பாராட்டுகிறது. அதி தீவிர பற்றுக்கொண்ட கத்தோலிக்கர்களைக் கொண்ட ஸ்காட்லாந்தில், இவ்வாறானதொரு பிரச்சாரம் மிகுந்த பலன் தரவல்லதோடு, தமிழர்களின் நியாயங்களை கத்தோலிக்கர்கள் உணரவும் இது ஏதுவாக அமையும்.

துண்டுப் பிரசுரங்களை வழங்கி கத்தோலிக்கர்களுக்கு தமிழர்களின் நிலையை எடுத்துரைக்கக்கூடிய அனைத்து இளையோர்களும், சிவந்தனின் கரங்களைப் பலப்படுத்த ஸ்காட்லாந்து விரையுங்கள் என கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வாழாத ஸ்காட்லாந்துக்குச் சென்று அங்கு எமது இன விடிவிற்காய் போராடும் அனைவருக்கும், லண்டன் வாழ் இளையோர்கள் உதவவேண்டும் என அனைத்துத் தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.