உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை – சர்வதேச மன்னிப்புச் சபை

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளில் பங்கேற்று சாட்சியமளிக்குமாறு தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஊடக அதிகாரி தோமஸ் யோகோம் தெரிவித்துள்ளார்.
 
சாட்சியமளிப்பதற்காக அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, விசாரணைகளில் கலந்து கொள்வதற்காக இதுவரையில் அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.