வலி.வடக்கில் 4146 குடும்பங்கள் மீள்குடியேற்றம்!

யாழ். உயர் பாதுகாப்பு வலயமான வலிகாமம் வடக்கு பகுதியில் மீள் குடியேற்றத்துக்கான அனுமதி நேற்று வழங்கப்பட்டதாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பகுதியில் கீரிமலை, மாவட்டபுரம், கட்டுவன் பகுதியில் சுமார் 4146 குடும்பங்களைச் சேர்ந்த 14,500 பேரை மீளக்குடியமர்த்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். அரச அதிபர் தெரிவித்தார்.

இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ். நகரில் பல்வேறு பகுதிகளில் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் பல வருடங்களாக தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்காக வலி வடக்கு பகுதிக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.